July 21, 2017
tamilsamayam.com
‘ஒருநாள் கூத்து’ படத்தில் நடித்த நடிகையின் ஆசையை நடிகர் விஜய் நிறைவேற்றுவாரா என்பது தெரியவில்லை.
தமிழில் ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதற்கு முன் இவர் மாடலிங் செய்து கொண்டிருந்தார். மாடலாக இருந்த நிவேதா பெத்துராஜ் ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் நடிகையானார். அந்தப் படத்தின் வெற்றி பெரிதாக இல்லாவிட்டாலும், அதில் இடம்பெற்ற ‘அடியே அழகே…’ பாடல், இளைஞர்களின் மனதில் அவரை பதிய வைத்துள்ளது.
தற்போது நிவேதா பெத்துராஜ், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘டிக் டிக் டிக்’ படத்திலும், வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு பேட்டியில் தனக்குப் பிடித்த நடிகர் விஜய் என கூறியிருந்தார்.இந்நிலையில், “விரைவில் விஜய் சாருடன் சேர்ந்து நடிப்பாய். உன்னுடைய கனவு நிச்சயம் நனவாகும்” என ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார், விஜய் படத்தின் தயாரிப்பாளரே இப்படி கூறியதால் விரைவில் நிவேதா பெத்துராஜ், விஜய்யுடன் ஜோடி சேர அதிக வாய்ப்பிருப்பதாக பலரும் கூறுகின்றனர்.