June 22, 2017
தண்டோரா குழு
இளைய தளபதி விஜய்யின் 43 வது பிறந்தநாளை முன்னிட்டு பல திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதைப்போல், அவருடன் நடித்த பல்வேறு பிரபலங்கள் தங்கள் அவருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் தீவிர விஜய் ரசிகை என்பது அனைவரும் அறிந்ததே.அவருடன் இணைந்து பைரவா படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், விஜய்யின் பிறந்த நாளுக்காக கீர்த்தி சுரேஷ் விஜய்யின் ஓவியத்தை வரைந்து தன் பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார்.