May 17, 2018
தண்டோரா குழு
காளி படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் ஆண்டனி,அர்ஜுன் இரண்டு பேரில் வில்லன் யார்? என்பது தான் படத்தின் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.