July 14, 2018
தண்டோரா குழு
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீதக்காதி’.
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படம் விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி வருகிறது.இந்த படத்தை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கி வருகிறார்.இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பார்வதி மேனன்,காயத்ரி ஆகியோர் நடிகின்றனர்.
சமீபத்தில் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு ‘சீதக்காதி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டார்கள்.இந்நிலையில் ‘சீதக்காதி’ படத்தின் மேக்கிங் டீசரை ஜூலை 15ம் தேதி சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.