October 3, 2018
தண்டோரா குழு
விக்ரமின் ‘சாமி ஸ்கொயர்’ படத்துக்கு பிறகு நடிகர் பாபி சிம்ஹா கைவசம் ரஜினிகாந்தின் ‘பேட்ட’, JPR (ஜான்பால் ராஜ்)-வுடன் இணைந்து ஷாம் சூர்யா இயக்கும் ‘அக்னி தேவ்’, விஜய் தேசிங்குவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ ஆகிய
படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பாபி சிம்ஹா வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை ‘ஸ்டுடியோ 18’ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘சீறும் புலிகள்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கடேஷ் குமார்.ஜி இயக்கவுள்ளார்.
இதில் பிரபாகரன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கவுள்ளாராம். எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.