July 31, 2017
தண்டோரா குழு
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விவேகம். ஆகஸ்ட் 10 ம் தேதி வெளிவரும் என எதிர்பார்த்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இந்நிலையில்,தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் சிறுத்தை சிவா தனது டுவிட்டர் பக்கத்தில், விவேகம் படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை அளித்துள்ளது, மேலும் படம் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.
படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனாலும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானதால் தல ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.