May 23, 2017
kalakkalcinema.com
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். வேதாளம் படம் போலவே சாங் செம ஹிட்டாக வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.
இந்நிலையில் விவேகம் படத்திற்கான தீம் சாங் பற்றிய சில தகவல் கிடைத்துள்ளன. இந்த படத்திற்கான தீம் சாங்கை கபிலன் வைரமுத்து எழுதி இருக்கிறார்.
அஜித் சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், அவர் படிப்படியாக வளர்ந்த விதத்தை கூறும் வகையில் இந்த பாடல் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான விவேகம் டீஸரில் இடம்பெற்ற ” நெவர் எவர் கிவ் அப் ” என்ற டைலாக் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்ததால் தீம் சாங்கில் ஆங்காங்கே இந்த வாசகத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாம் படக்குழு.