August 22, 2017
தண்டோரா குழு
சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் மூன்றாவது படம் விவேகம். காஜல் அகர்வால், விவேக் ஓபராய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகவுள்ளது.
ஏற்கனேவே டீசர்,பாடல் என சமூகவலைத்தளத்தை கலக்கிய இந்த படத்திற்காக அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.வழக்கமாக அஜித் படம் என்றால் அவரது கட்அவுட்டிற்கு மாலை அணிவித்து, பாலபிஷேகம் செய்வது அஜித் ரசிகர்களின் வழக்கம் இந்நிலையில், தற்போது கோவை அஜித் ரசிகர்கள் அஜித்தின் கட் அவுட்க்கு பாலபிஷேகம் செய்வது போன்ற செயல்களை தவிர்க்க முடிவு செய்துள்ளனர்.
அதற்கு பதிலாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளனர்.இதனால் வீண் செலவாகும் பணம் பல ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.அஜித் விரும்புவதும் இது போன்ற செயல்களை தான், கோவை ரசிகர்களை போன்று மற்ற ரசிகர்களும் இதை பின்பற்றுவார்களா?