June 22, 2017
தண்டோரா குழு
விஷாலுடன் ‘திமிரு’, ‘காஞ்சிவரம்’, ‘பள்ளிக்கூடம்’ போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் கடந்த 2008ம் ஆண்டு விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு சினிமா உலகில் இருந்து விலகினார்.
இந்நிலையில், சி.வேல்மதி இயக்கத்தில் இவர் மீண்டும்’அண்டாவ காணோம்’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
வித்யாசமான தலைப்பு கொண்டுள்ள இப்படம் பணிகள் முடிவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ஆகியவற்றை வரும் 26ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடக்கவிருக்கும் இந்த விழாவிற்கு கோலிவுட் திரையுலகில் உள்ள முக்கிய கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது