May 13, 2017
தண்டோரா குழு
கமல்ஹாசன் இயக்கத்தில் பெரும் சர்ச்சைக்கு பிறகு வெளிவந்த படம் விஸ்வரூபம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் கமல்ஹாசன் இயக்கி வருகிறார். சில காரணங்களால் படத்தின் வேலைகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் படத்தை வெளியிடுவதற்கான பணிகள் அண்மையில் துவங்கியது.
இந்நிலையில், கமல் சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதலுக்கு பேட்டியளித்தார். அதில், விஸ்வரூபம் படத்தின் 2ஆம் பாகம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், ஷூட்டிங்கிற்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் இல்லாமல் சில வேலைகள் மட்டும் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் மீதி இருப்பதாக கூறினார். அவற்றை முடித்த பின்னர், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடித்து இந்த ஆண்டு இறுதியில் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
அதைபோல், சபாஷ் நாயுடு படப்பிடிப்பு இந்த ஆண்டு தான் முடிகிறது என்றும், அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.