February 14, 2018
தண்டோரா குழு
வீரம், வேதாளம், விவேகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜீத், சிவா கூட்டணி நான்காவது முறையாக ‘விசுவாசம்’ படத்தில் இணைந்துள்ளனர்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ‘விசுவாசம்’ என டைட்டில் அறிவித்து தீபாவளியன்று படம் வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வந்தாலும், மேலும் ஒரு ஹீரோயின் படத்தில் இருப்பதாக தெரிகின்றது.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக படத்தின் இசையமைப்பாளராக யார் இருப்பார் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்திற்கு டி.இமான் தான் இசையமைக்க இருக்கிறாராம்.இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளார்.