February 20, 2018
kalakkalcinema.com
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக விஸ்வாசம் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார்.
விஸ்வாசம் ரவுடி – போலீஸ் கதை எனவும் படத்தில் அஜித் டபுள் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அர்ஜுனை போலீசாக நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பதால் ரசிகர்களுக்கு படம் மிக பெரிய ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.