March 21, 2018
kalakkalcinema.com
தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, ரோபோ ஷங்கர் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ஆர்.கே.சுரேஷ் தற்போது பில்லா பாண்டி என்ற படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.