July 11, 2017
தண்டோரா குழு
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமலின் மேற்பார்வையில் தினந்தோறும் ஒளிபரப்பாகி வரும் ஷோ பிக்பாஸ்.
சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசபடும் இந்நிகழ்ச்சியில் ரைசா என்ற மாடல் 14 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். இவர் மாடலாக தான் இருக்கிறார், என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது இவர் தமிழ் படம் ஒன்றில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல் நடிப்பில் விரைவில் திரைக்குவரவுள்ள விஐபி 2 படத்தில் கஜோலுக்கு உதவியாளராக ரைசா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.