May 29, 2017
தண்டோரா குழு
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு தனது ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’, மூலம் தயாரிக்கும் அடுத்த படத்தின் தகவலை வெளியிட்டுள்ளார்.
வைபவ், சனா ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ‘ஆர்.கே. நகர்’ என்று பெயரிட்டுள்ளனர். ஆனால், வழக்கம் போல் வெங்கட் பிரபு படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க வில்லையாம். அவருக்கு பதில் பிரேம்ஜி இசையமைக்கவுள்ளார்
என்று கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு டீம் ஓன்று சேர்ந்தால் சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது. தற்போது இப்படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.