February 20, 2018
தண்டோரா குழு
பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘நாச்சியார்’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்தில் ஜீவி.பிரகாஷின் நடிப்புக்கும் பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், நயன்தாராவின் அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
முழுக்க வட சென்னையை களமாகக் கொண்ட இப்படத்தின் முதல்கட்ட வேலையில் இறங்கியிருந்தார் கோபி நயினார். இதில் குத்துச்சண்டை முக்கிய அம்சமாக இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, ‘செம’, ‘100 % காதல்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘ரெட்ட கொம்பு’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது இப்படத்தின் குத்துச்சண்டை காட்சிகளுக்காக பிரத்யேகமாக பயிற்சி பெற உள்ளார்.