February 26, 2018 தண்டோரா குழு
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த போது மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார்.
ஸ்ரீதேவியின் உடல் தற்போது துபாய் அல் குவாசிஸ் பகுதியில் உள்ள காவல்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை தாமதமானதால் காரணத்தினால், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து , இன்று மாலைக்குள் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகநடிகர் கமல்ஹாசன்பிற்பகல் 3.25 மணியளவில் மும்பை புறப்படுகிறார்.