March 12, 2018
kalakkalcinema.com
இந்திய திரையுலகின் முதல் லேடி சூப்பர் ஸ்டாரான ஸ்ரீ தேவியின் மரணம் இந்திய திரையுலகிற்கே மிக பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னையில் உள்ள சி.ஐ.டி நகரில் உலா இல்லத்தில் ஸ்ரீ தேவிக்கு 16-ம் நாள் சடங்கு நடைபெற்றது.
இந்த சடங்கில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஸ்ரீ தேவிக்கு அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீ தேவிக்கு நெருங்கிய நண்பர்களான ஷாலினி மற்றும் அஜித்தும் இந்த சடங்கில் கலந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீ தேவிக்காக அஜித்தும் ஷாலினியும் அஞ்சலி செலுத்திய சில புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.