July 29, 2017
தண்டோரா குழு
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமாகி, தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் ஜூலி.
இந்த நிகழ்ச்சி மூலம் அவர் மீது எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் சமூக வலைத்தளங்களில் அவர் பிரபலமாகிவிட்டார்.
இதனால் அவருக்கு தற்போது சினிமா வாய்ப்பு வந்துள்ளது. பல படங்களில் சிறிய சிறிய காமெடி கதாபாத்திரங்களில் நடித்த கூல் சுரேஷ் தற்போது ஜூலியை ஹீரோயினாக வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
புதுமுக நடிகர் நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சரவணன் இயக்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்ததும் ஜூலியிடம் கதை சொல்லவுள்ளதாவும் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.