June 30, 2017 தண்டோரா குழு
இனிது இனிது படத்தில் கல்லூரி மாணவராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அபிஷேக். அதன் பின் கமலுடன் பாபநாசம் படத்தில் கெளதமியின் தம்பியாக நடித்தார். தற்போது,வெருளி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இப்படத்தின் 15ம் நாள் வெற்றிவிழாவில் கோவையில் அவரை சந்திந்தோம்.
தமிழ் சினிமாவில் உங்கள் என்ட்ரி எப்படி ?
சென்னை தான் என் சொந்த ஊர். பெங்களூரில் மாடலிங் செய்து கொண்டிருந்தேன். இனிது இனிது படத்திற்காக பிராகாஷ் ராஜ் சார் தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதன்பின் நானே எதிர்பார்க்காமல் கமலுடன் பாபநாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கமல்ஹாசனுடன் முதல் சந்திப்பு குறித்து?
கமல் சார் மிஸ்டர் பர்பெக்ட்என்று தான் சொல்ல வேண்டும். எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்வார். அவரை முதலில் பார்த்ததும் நான் என் ஸ்கிரிப்ட்டையே மறந்து விட்டேன். பின்னர் அவரே நானும் உன்னை போன்று ஒரு நடிகன் தான் என்று எனக்கு நடிக்க ஊக்கமளித்தார்.
விக்ரமுடன் நடித்து வரும் படம் பற்றி?
சியான் விக்ரமுடன் ஸ்கெச் படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறேன்.
விக்ரம் என் கூடபிரக்காத அண்ணன் மாதிரி. அவரை போல் எனர்ஜி யாரிடமும் இல்லை. சில சமயங்களில் அவரே எனக்கு நடித்து காட்டி இது போல்நடி என்று சொல்வார். என் ஸ்டைலையே மாட்டியவர் அவர். என் ரோல்மாடலே விக்ரம் அண்ணன்தான்.
தற்போது நடித்து வரும் படங்கள் குறித்து ?
சமுத்திரக்கனியுடன் ஆண் தேவதை, ஜீவி பிரகாஷின் ஐயங்கார், மன்னர் வகையராக்கள் இன்னும் சில படங்களில் வில்லனாக நடித்து வருகிறேன்.
வில்லன் கதாபாத்திரம் தான் அதிக வாய்புகள் வருகிறது. எனக்கு வில்லானாக நடிக்கவே பிடித்திருகிறது. ஹீரோவை விட வில்லன் தானே மாஸ். ஏனென்றால் ஒரு படத்தில் ஹீரோ அளவிற்கு வில்லனுக்கும் அதிக முக்கியத்தும் கொடுக்கப்படும் என்றார்.
எது எப்படியோ தமிழ் சினிமாவிற்கு பாகுபலி பல்வாள்தேவன் போல் ஒரு வில்லன் கிடைத்துவிட்டார் என்றே சொல்லலாம்.