January 14, 2020 தண்டோரா குழு
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது எந்தவொரு படைப்பாளிக்கும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. இதற்கிடையில், 2௦2௦ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளை வெல்லப்போவது யார் என்று பெரிதும் எதிர் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடித்த ’ஜோக்கர்’ திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மார்ட்டின் ஸ்கார்ஸெஸியின் ’தி ஐரிஷ்மேன்’ க்வெண்டின் டாரண்டினோவின் ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’, சாம் மென்டஸ் இயக்கிய ‘1917’, ஆகிய படங்களும் தலா பத்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
92 வது ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகள் – முழுப் பட்டியல்
சிறந்த படம்
1) ஃபோர்ட் v. ஃபெராரி (Ford v. Ferrari)
2) தி ஐரிஷ்மேன் (The Irishman)
3) ஜோஜோ ராபிட் (Jojo Rabbit)
4) ஜோக்கர் (Joker)
5) லிட்டின் வுமன் (Little Women)
6) மேரேஜ் ஸ்டோரி (Marriage Story)
7) 1917
8) ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time … in Hollywood)
9) பாராஸைட் (Parasite)
சிறந்த நடிகை
1) சிந்தியா எரிவோ – Harriet
2) ஸ்கார்லெட் ஜொஹன்ஸன் – Marriage Story
3) ஸோய்ர்ஸ் ரோனன் – Little Women
4) சார்லிஸ் தெரோன் – Bombshell
5) ரென்ஸ் ஸெல்வெகர் – Judy
சிறந்த நடிகர்
1) ஆன்டோனியோ பாந்தெரஸ் – Pain and Glory
2) லியார்னாடோ டிகாப்ரியோ – Once Upon a Time … in Hollywood
3) ஆடம் டிரைவர் – Marriage Story
4) ஜானதன் ப்ரைஸ் – The Two Popes
5) ஹாக்கின் ஃபீனிக்ஸ் – Joker
சிறந்த துணை நடிகை
1) கேத்தி பேட்ஸ் – Richard Jewell
2) லாரா டென் – Marriage Story
3) ஸ்கார்லெட் ஜொஹன்ஸன் – Jojo Rabbit
4) ஃப்ளோரன்ஸ் பக் – Little Women
5) மார்காட் ராபீ – Bombshell
சிறந்த வெளிநாட்டுப் படம்
1) கார்ப்பஸ் கிரிஸ்டி (Corpus Christi)- போலந்து
2) ஹனிலேண்ட் (Honeyland)- வடக்கு மாஸிடோனியா
3) லெஸ் மிஸரபிள்ஸ் (Les Miserables) – பிரான்ஸ்
4) பெய்ன் அண்ட் க்ளோரி (Pain and Glory) – ஸ்பெயின்
5) பாராஸைட் (Parasite) – தென் கொரியா
சிறந்த இயக்குநர்
1) போங் ஜூன் ஹோ – Parasite
2) சாம் மென்டஸ் – 1917
3) டோட் பிலிப்ஸ் – Joker
4) மார்ட்டின் ஸ்கார்ஸெஸி – The Irishman
5) க்வெண்டின் டாரண்டினா – Once Upon a Time … in Hollywood
சிறந்த ஆவணப்படம்
1) அமெரிக்கன் ஃபாக்டரி (American Factory)
2) தி கேவ் (The Cave)
3) தி எட்ஜ் ஆஃப் டெமாக்ரஸி (The Edge of Democracy)
4) ஃபார் ஸாமா (For Sama)
5) ஹனிலேண்ட் (Honeyland)
சிறந்த அனிமேஷன் படம்
1) ஹவ் டு ட்ரெய்ன் யுவர் ட்ராகன் – தி ஹிட்டன் வேர்ல்டு (How to Train a Dragon- The Hidden World)
2) டாய் ஸ்டோரி 4 (Toy Story 4)
3) ஐ லாஸ்ட் மை பாடி (I Lost My Body)
4) க்ளாஸ் (Klaus)
5) மிஸ்ஸிங் லிங்க் (Missing Link)
சிறந்த துணை நடிகர்
1) டாம் ஹேங்க்ஸ் – A Beautiful Day in the Neighborhood
2) ஆண்டனி ஹாப்கின்ஸ் – The Two Popes
3) பிராட் பிட் – Once Upon a Time … in Hollywood
4) ஜோ பெஸ்சி – The Irishman
5) அல்பஸீனோ – The Irishman
சிறந்த பின்னணி இசை
1) ஜோக்கர்
2) லிட்டில் வுமன்
3) மேரேஜ் ஸ்டோரி
4) 1917
5) ஸ்டார்வார்ஸ்- ரைஸ் ஆஃப் தி ஸ்கைவாக்கர்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்
1) அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்
2) தி ஐரிஷ்மேன்
3) தி லயன் கிங்
4) 1917
5) ஸ்டார்வார்ஸ்- ரைஸ் ஆஃப் தி ஸ்கைவாக்கர்
சிறந்த ஆடை வடிவமைப்பு
1) தி ஐரிஷ்மேன்
2) ஜோஜோ ராபிட்
3) ஜோக்கர்
4) லிட்டில் வுமன்
5) ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்
லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி 92வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இன்றி இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.