ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி, நடித்து 1983-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘முந்தானை முடிச்சு’.இளையராஜா இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ‘முந்தானை முடிச்சு’ படம் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை ஏ.வி.எம் சரவணனிடமிருந்து ஜே.எஸ்.பி சதீஷ் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியது.
மேலும் இப்படத்தை பாக்யராஜே இயக்கவுள்ளார்.
பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதர கதாபாத்திரங்களுக்கான தேர்வு கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் நடைபெறவுள்ளது. இசையமைப்பாளர் உள்ளிட்ட இதர படக்குழுவினர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது