October 19, 2018
தண்டோரா குழு
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,நடிப்பில் வெளியான படம் எந்திரன்.இப்படம் வசூல் ரீதியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.இதனைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2.0 படத்தை சங்கர் இயக்கி வருகிறார்.தற்போது படப்பிடிப்பு முடிந்து வீஎப்எக்ஸ் பணிகள் நடந்து வருகிறது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரூ.400 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.முக்கிய வேடத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில்,பாடல் வரிகள் அடங்கிய வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் ராஜாளி,எந்திர லோகத்து சுந்தரியே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.