June 26, 2018
தண்டோரா குழு
சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் சூர்யா37 படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டு இருக்கிறது.
நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி,ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சாயிஷா ஷைகல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும்,இப்படத்தில் மோகன் லால்,அல்லு சிரிஷ்,பாலிவுட் ஸ்டார் பொம்மன் இரானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில் முதற்கட்டமாக, படப்பிடிப்பு லண்டனில் பூஜையுடன் துவங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.