November 25, 2019
தண்டோரா குழு
1980-களில் சினிமாவில் கோலோச்சிய முன்னணி நட்சத்திரங்கள் ஆண்டுதோறும் சங்கமிக்கும் நிகழ்வாக 80-ஸ் ரியூனியன் நிகழ்ச்சி இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.
80-ஸ் ரியூனியன் நிகழ்ச்சியில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா, மோகன்லால், சிரஞ்சீவி, அம்பிகா, ராதா, பிரபு, மோகன்லால், ரமேஷ் அரவிந்த், ரேவதி, ஜெயசுதால் லிஸ்ஸி, பிரியதர்ஷன், சுமலதா, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நட்சத்திர ஒன்று கூடலை ஒருங்கிணைக்க ஒவ்வொரு ஆண்டும் ஒருவரிடம் பொறுப்பு வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நடிகர் சிரஞ்சீவி ஒருங்கிணைத்துள்ளார். நட்சத்திர சங்கமத்தில் பங்கேற்றவர்கள் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.