December 12, 2017
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் 15 வருடங்களை கடந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கமல், விஜய், அஜித், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் இவர் தற்போது கர்ஜனை, 96, என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக வலம் வரும் நடிகர் ஆர்யாவுக்கு நேற்று பிறந்த நாளாகும்.அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திரையுலகை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகை த்ரிஷாவும் ஆரியாவிற்கு டுவிட்டர் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பிறந்த வாழ்த்துக்கள் ஆர்யா எப்போது போலும் இரு, மற்றவர்களை சந்தோஷப்படுத்திக் கொண்டே இரு “குஞ்சுமணி” என்று தெரிவித்துள்ளார். அதற்கு ஆரியாவும் நன்றி என் குஞ்சுமணி எனக் கூறியுள்ளார். இதற்கிடையில், த்ரிஷா குஞ்சுமணி என்று சொன்னதை அவரது டுவிட்டிலேயே நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.