August 30, 2018
தண்டோரா குழு
நடிகர் சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் நந்த கோபாலன் குமரன் என்ற கதாபாத்திரத்தில் சமூக ஆர்வலராக சூர்யா நடித்து வருகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங்,சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளி போவதாக படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.மேலும் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.