September 26, 2018
தண்டோரா குழு
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி, கத்தி படங்களின் வெற்றியை தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மூன்றாவது இணைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.மேலும் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா வருகிற அக்டோபர் 2ம் தேதி நடைபெறவுள்ளது.இதற்கிடையில்,இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில்,இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தான் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.