August 24, 2018
தண்டோரா குழு
கடந்த 2015ல் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டெம்பர்’.இதனை தமிழில் ‘அயோக்யா’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.இப்படத்தை வெங்கட்மோகன் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.விஷாலுக்கு ஜோடியாக ராஸி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.மேலும் இப்படத்தில் பார்த்திபன்,கே.எஸ்.ரவிகுமார், சச்சு,வம்சி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை சென்னை ஈ.சி.ஆரில் பிரம்மாண்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.