May 9, 2018
தண்டோரா குழு
சீமராஜா படத்தின் புதிய தோற்றத்துக்காக நடிகர் சிவகார்திகேயன் முறுக்கு மீசை வளர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்திகேயன் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் முதல் முறையாக நடிகர் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.மேலும் நடிகை சிம்ரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் படத்திற்காக சிவகார்திகேயன் புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.அதற்காக அவர் பெரிய மீசையை வளர்த்து வருகிறார்.ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரு வெற்றி படங்களை கொடுத்த இவர்களது கூட்டணியில் உருவாகும், சீமராஜா படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.