November 30, 2017
தண்டோரா குழு
“பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய பின்பு நடிகை ஓவியாவிற்கு என்று ரசிகர்கள் பட்டாளமே உஉருவானது.
இதனால் ஓவியாவிற்கு சினிமா வாய்ப்பு குவிந்த வண்ணம் உள்ளது.இதை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3 படத்தில் நடிக்க ஓவியா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்நிலையில்,தற்போது அந்த படத்திலிருந்து விலகியுள்ளார். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்புகள் துவங்க தாமதம் ஆனதாலேயே, விலகுவதாக விளக்கம் அளித்துள்ளார்.தாம் வாங்கிய முன்பணத்தையும், வட்டியுடன் நடிகை ஓவியா திருப்பி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.