October 10, 2017
தண்டோரா குழு
தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.
இந்த வருடம் அவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன.இந்நிலையில், தற்போது த்ரிஷா விஜய் சேதுபதியுடன் ’96’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதையில் பிளாஷ் பேக்கில் பள்ளி மாணவியாக நடிக்கிறார். இதற்காக 30 வயதை கடந்த த்ரிஷா உடல் குறைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி த்ரிஷா ‘கர்ஜனை’ படத்தில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னும் சில படங்களில் சோலோ ஹீரோயினாக ஆக்ஷ்ன் அவதாரம் எடுக்கிறார்.இதனால் தினமும் ஜிம்முக்கு சென்று வருகிறார். அதனால் தான் உடல் இளைத்து காணப்படுகிறார்.