ஜோக்கர் படத்திற்கு சிறந்த தமிழ்படத்திற்கான 64வது தேசிய திரைப்பட விருது கிடைத்தது.
டெல்லியில் நேற்று 64வது தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது. இதில் இயக்குனர், தயாரிப்பாளரான பிரியதர்ஷன் தலைமையிலான குழு 64வது தேசிய திரைப்பட விருது பட்டியலை வெளியிட்டது. இதில் சிறந்த தமிழ் படத்திற்கான 64வது தேசிய திரைப்பட விருது ஜோக்கர் படத்திற்கு கிடைத்தது.
இது தொடர்பாக ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜூ முருகன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அதில் கூறியிருப்பதாவது:
ஜோக்கர் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. நான் விருதுக்காக படம் எடுப்பதில்லை. சரியாக படம் எடுத்து தியேட்டருக்கு கொண்டு போய் சேர்த்தாலே அந்த படத்திற்கு விருது கிடைத்தது மாதிரிதான்.
ஜோக்கர் படத்தை அரசியல் படமாக கொடுத்திருப்பது எனக்கு பின்னால் வருபவர்களுக்கு நிச்சயமாக வழிகாட்டும். இப்படம் மனித உரிமை போராளிகள் பற்றிய படம். இப்படத்திற்கு விருது கிடைத்ததன் மூலம் அவர்களுக்கான மரியாதையை பெற்றுக்கொடுத்ததாக கருதுகிறேன். அதிகாரத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலுக்கு கிடைத்த மரியாதையாக நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது