August 16, 2018
தண்டோரா குழு
வீரம்,வேதாளம்,விவேகம் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா – அஜித் கூட்டணி விசுவாசம் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா,தம்பி ராமையா,ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,இந்தியில் கடந்த 2016 – ம் ஆண்டு அமிதாப் பச்சன்,டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பிங்க்.இப்படம் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றது.அஜித்தை வைத்து இயக்குநர் வினோத் இயக்கும் படம் பிங்க் படத்தின் ரீமேக்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தமிழில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார்.இதனால் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.