August 28, 2018
தண்டோரா குழு
கடந்த 2006-ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் ‘ரெண்டு’.இப்படத்தில் மாதவன் டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார். இதில் ஒரு மாதவனுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது,‘சைலன்ட்’ என்ற திகில் படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக கதை உள்ளதால் அவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.‘சைலன்ட்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ஹேமந்த் இயக்கவுள்ளார்.இப்படத்தில் அனுஷாவிற்கு ஜோடியாக மாதவன் நடிக்கிறார்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தை ‘பீப்பிள் மீடியா ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.