November 14, 2017
தண்டோரா குழு
இயக்குனர் கோபி நைனார் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ திரைப்படம்.
இப்படம் சமூகத்திலுள்ள ஏழை, எளியோர்களின் வாழ்வு நிலையை பகிரங்கமாக திரையில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்படம் வெளியான நாளிலிருந்து, பல சமூக ஆர்வலர்களின் பாராட்டையும் திரையுலகினரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
இதுமட்டுன்றி பல தரப்பு மக்களின் பாராட்டைப் பெற்ற அறம் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் புகழ்ந்து பேசியுள்ளார். அறம் திரைப்படம் தமிழில் மற்றதொரு சிறந்த படைப்பு என ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.