தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ் குமார். கடந்த வாரம் இவரது நடிப்பில் உருவான சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் தனது புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க, கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல மாடல் திவ்யபாரதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆக்ஷன் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பேச்சுலர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளியிட்டார்.
ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில்,
கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்…கமிட் ஆனா உம்முனு இருக்கனும்.. Bachelorனா ஜம்முனு இருக்கலாம்… ! #Bachelor First Look வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்! என பதிவிட்டுள்ளார்.
ஈஷாவில் அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா!ஆதியோகி முன்பு சிவனடியார்கள் புடைசூழ நடைபெற்றது
ஈஷா தமிழ்த் தெம்பு திருவிழா கொண்டாட்டங்கள் நிறைவு -12 நாட்கள் நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை புரோஜோன் மாலில் ஆடை அலங்கார போட்டி (பேஷன் ஷோ) நிகழ்ச்சி
வில்லா சந்தையில் கால் பதித்தது கே ஜி குரூப்பின் டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம்
புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் நடைபெற்ற தவக்கால இரத்த தான முகாம்
தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம் – மூன்று நாட்களாக நடைபெற்ற மாபெரும் நாட்டு மாட்டு சந்தை நிறைவு