October 16, 2017
தண்டோரா குழு
காற்று வெளியிடை படத்தினை தொடர்ந்து தனது அடுத்த படத்தின் வேலைகளை மணிரத்னம் துவங்க ஆயத்தமாகி வருகிறார்.
அவரது அடுத்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கஉள்ளனர்.
இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பலரது மனதை வென்று அப்போட்டியில் வெற்றியும் பெற்ற ஆரவ் மணிரத்னம் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ‘எதிர்பாராத இந்த சந்திப்பிற்கு மணிரத்னம் மற்றும் சுஹாசினி அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்து, புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.