September 11, 2018
தண்டோரா குழு
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்றாயன் வெளியேறப்பட்டார்.இதையடுத்து,பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்கில் ரித்விகா மட்டும் இந்த வாரத்திற்கான எவிக்ஷனுக்கு நாமினேட் ஆனார்.
இந்நிலையில்,பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சென்றாயன் நடிகர் சிம்புவை சந்தித்துள்ளார்.அவருக்கு நடிகர் சிம்பு திருமூலரின் ‘திருமந்திரம்’ புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார்.அந்த புத்தகத்தில் நடிகர் சிம்பு தமிழில் கையொப்பமிட்டு பரிசாக கொடுத்துள்ளார்.இவர்களது சந்திப்பின் போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான மஹத் உடன் இருந்துள்ளார்.