September 28, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த சூரி,‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ‘பரோட்டா’ சூரியாக பிரபலமானார்.
அதன் பின் விஜய்,அஜித்,சூர்யா என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து சூரி தற்போது முன்னணி நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் ஒருவராக இருக்கிறார்.தற்போது,சூரி கெளதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’,விக்ராந்தின் ‘வெண்ணிலா கபடிகுழு 2’ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில்,நடிகர் சூரி சின்னத்திரையில் என்ட்ரியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‘கலர்ஸ் தமிழ்’ சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் ‘திருமணம்’.இதில் ஹீரோ,ஹீரோயினாக சித்து,ஸ்ரேயா நடிக்கின்றனர்.இந்த சீரியலில் சூரி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.