January 19, 2018
kalakkalcinema.com
தமிழ் சினிமாவில் அஜித், விஜயை அடுத்து முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா, இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உலகம் முழுவதும் உள்ளது.
இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளர்களாக இருக்கும் சங்கீதா மற்றும் நிவேதா என்பவர்கள் சூர்யாவின் உயரத்தை பற்றி மோசமாக விமர்சனம் செய்துள்ளனர்.
இதனால் சூர்யா ரசிகர்கள் அந்த இரண்டு தொகுப்பாளர்களையும் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நம்மோட உயரத்தை விட நாம எந்த அளவிற்கு உயர்வான இடத்தில் இருக்கோம் என்பது தான் முக்கியம் என பேசி இருக்கும் டயலாக்குகளை பதிலடியாக கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.