December 21, 2017
தண்டோரா குழு
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஓவியா. அதன் மூலம் அவருக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி என்று அவரை பின் தொடர்பவர்கள் ஏராளம்.
பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் அதன் பின் பல்வேறு பொது நிகழ்சிகளில் கலந்து வருகிறார். ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று தனது பக்கம் மூலம் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் சிம்பு – தனுஷ் குறித்து ஒரு வரியில் பதிலளிக்குமாறு கேட்டார். இதற்கு பதிலளித்த ஓவியா சிம்பு நல்ல மனிதநேயமிக்கவர் என்றும் தனுஷ் இனிமையானவர் என்றும் கூறினார். ஓவியா இதுவரை சிம்பு – தனுஷுடன் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.