December 26, 2017
தண்டோரா குழு
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் மாரி. இந்தப் படம் வெளியான போதே படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், சில நாள்களுக்கு முன்பு மாரி-2வில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார்.
பத்து வருட இடைவேளைக்கு பின்பு மீண்டும் தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.