January 24, 2017 tamilsamayam.com
ஜல்லிக்கட்டை தடை செய்வதை விட்டுவிட்டு,அதனை வரைமுறைபடுத்த முயற்சி செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடர்பாக என்.டி.டி.வி தொலைக்காட்சிக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டியில்,”ஜல்லிக்கட்டு தமிழரின் பெருமை என கூறப்படுவது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்றால்,கேரளாவில் கோவில்களில் சாமி சிலையை சுமந்து வரும் யானைகள் துன்புறுத்தப்படவில்லையா?.ஆனால் மத சடங்கு என்ற வரையறைக்குள் கேரளாவில் யானைகளை வளர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டும் கடவுள் நம்பிக்கையோடு இணைந்த ஒரு விளையாட்டுதான்.எனக்கு மத நம்பிக்கை கிடையாது.அதற்காக நான் மட்டுமே நீதி சொல்ல முடியாது.பெரும்பான்மையான மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.சாலை விபத்திலும்,மது அருந்தியும்,போர்களிலும் பல்லாயிரக்கணக்கான பேர் உயிரிழக்கின்றனர்.அதற்காக அவற்றுக்கு தடை கொண்டு வர முடியுமா?
ஜல்லிக்கட்டை தடை செய்யக் கூடாது.அதற்கான விதிமுறைகளை சரியாக வகுத்து வரைமுறைப்படுத்த வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.