September 12, 2018
தண்டோரா குழு
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,நடிப்பில் வெளியான படம் எந்திரன்.இப்படம் வசூல் ரீதியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2.0 படத்தை சங்கர் இயக்கி வருகிறார்.தற்போது படப்பிடிப்பு முடிந்து வீஎப்எக்ஸ் பணிகள் நடந்து வருகிறது.லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.கடந்த ஜனவரி மாதம் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.ஆனால் வீஎப்எக்ஸ் பணிகளால் படம் வெளியாவதில் தாமதமானது.
இதற்கிடையில்,நவம்பர் 29ல் 2.0 படம் வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இதையடுத்து,நாளை (செப்டம்பர் 13) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2.0 படத்தின் டீஸர் வெளியிடப்பட இருக்கிறது.அதுவும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடப்படுகிறது.இந்நிலையில், தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.