November 30, 2017
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக விளங்கி வந்தவர் ஹிப் ஹாப் ஆதி, சில மாதங்களுக்கு முன்பு முதல் முதலாக மீசையை முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார்.
முதல் படமே மெகா ஹிட்டானது. இந்த படத்தை அடுத்து அவருக்கு திரையுலகில் ரசிகர்கள் கூட்டம் எக்கசக்கமானது. இந்நிலையில் தற்போது இவருடைய திருமணம் குறித்த தகவல் கசிந்துள்ளது.
இவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் நிச்சயக்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் திருமணம் எனவும் தகவல் வெளியானது, அதற்கு ஏற்றார் போல ஆதியும் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன்னை வாழ்த்துமாறு கேட்டு கொண்டுள்ளார்.