February 27, 2017
tamilsamayam.com
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திருமணநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டின் முன் ஒன்றுக்கூடிய ரசிகர்கள் ‘கபாலி’ ஸ்டாருக்கு 36வது திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்திய பிரபலங்களில் மிகவும் தனித்துவமிக்க சூப்பர்ஸ்டார் மீதுள்ள அளவில்லா அன்பின் வெளிப்பாடாக, அவரது திருமண நாளை முன்னிட்டு, ரசிகர்கள் ரஜினி நடித்த ‘படையப்பா’ திரைப்பட ஸ்டைலில் ஒரு சிலை ஒன்றை வடிவமைத்து சூப்பர்ஸ்டாருக்கு பரிசளித்தனர். மேலும், ரஜினி புகைப்படம் போட்ட டி-ஷர்ட்கள், போயஸ் தோட்ட பகுதியில் பிரம்மாண்ட போஸ்டர்கள் என ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடந்த 1981ஆம் ஆண்டு பிப்-26ஆம் தேதி திருப்பதியில் ரஜினிகாந்த், லதா ரங்காச்சாரியை திருமணம் செய்துக்க கொண்டார். கல்லூரிப் படிப்பின்போது, நாளேடு ஒன்றுக்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேட்டி எடுக்க வந்தார் லதா. அதன் பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ஐஷ்வர்யா தனுஷ் ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள் உள்ளனர்.