October 27, 2017
தண்டோரா குழு
இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ், ஹீரோவாக உருவெடுத்து அதிக படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜீ.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்து ராஜா’ படம் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ஜீ.வி.பிரகாஷ் “லிட்டில் இளையதளபதி” டைட்டிலை பயன்படுத்தவுள்ளார் என்று சில பேச்சுக்கள் உலா வந்தது.இதற்கு ஜி.வி.பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறும்போது “எந்த பெயரையும் யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. விஜய் எனக்கு சகோதரர் போல. வீணாக வதந்தி பரப்பாதீர்கள்” என்று கோபத்துடன் கூறியுள்ளார்.