January 31, 2017
tamilsamayam.com
‘தல’ அஜித்தின் ஆலுமா டோலுமா பாடல் மேலும் ஒரு மைல்கல் சாதனையை எட்டியுள்ளது.
சிவா இயக்கத்தில் ‘தல’ அஜித் நடித்து கடந்த 2015ல் வெளியான சூப்பர் ஹிட் படம் வேதாளம். இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் பட்டைய கிளப்பியது.
தவிர, இந்த பாடல் பல சாதனைகளை படைத்தது. தற்போது மேலும் ஒரு புதிய சாதனை ஆலுமா டோலுமா படைத்துள்ளது. யூ.டியூப்.,பில் 15 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
தவிர அஜித்தின் இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் இதுவரை எந்த பாடலும் இந்த சாதனையை படைத்ததில்லை.