January 17, 2018
தண்டோரா
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த படம் மாரி. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிலையில் சமீபத்தில் தான் மாரி2 படத்திற்கான பூஜை போடப்பட்டது.
முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார்.
இதில் அனிருத்துக்கு பதிலாக இரண்டாம் பாகத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கவுள்ளார். தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் இளையராஜாவை சந்தித்து ஆசிபெற்று, அவரது குரலில் முதல் பாடலை பதிவுசெய்து மாரி2 படத்திற்கான பாடல்
தொகுப்பு துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.